உங்கள் வீட்டில் தங்கம் நிலைத்திருக்கும் யோகம் வர வேண்டுமா? இவ்வான்மீக முறைகளை கடைப்பிடியுங்கள்!
உலகிலே உள்ள உலோகங்களில் பெறுமதிமிக்கவொன்று தங்கம் ஆகும். இதன் பெறுமதி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதொன்றுடன் எங்கும் செல்லுப்படியாகும் ஒரு பொருளாகும். இதன் பெறுமதி அதிகரிக்குமே பெரும்பாலும் ஆனால் குறைந்து போவது இல்லை. அதனாலேயே இதனை உலக நாடுகள் தமது கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம்.
நாமும் எம் வீட்டில் வாங்கி வைத்திருக்கும் தங்கம் அல்லது வைப்பில் இருக்கும் தங்கம் குறையாது இருக்க ஒரு யோகம் வேண்டும். அந்த யோகம் ஆன்மீக ரீதியாக எப்படி நாம் தக்க வைத்து தங்கத்தை பெருக்குவதுடன் நீங்காமல் இருக்க செய்வது என்று இன்று பார்ப்போம்.
பராமரிப்பு
நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் ஒரு பொருளை பத்திரமாக பராமரித்து வைக்க வேண்டும் என்றால் நாம் நம்மிடம் இருக்கும் பொருளை சுத்தமாகவும் தினசரி பராமரித்து இருக்கும் போது அந்த பொருள் மென்மேலும் நம்மிடம் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். இவ்வாறு பாராமரக்கும் அளவிற்கு தங்கமும் பணமும் நம்மிடம் வந்து சேர்ந்து கொண்டே தான் இருக்கும்.
சுத்தம் செய்தல்
நீங்கள் வாங்கிய நகைகளை பராமரிப்பதற்கு சுத்தம் செய்ய வேண்டும் என்று எண்ணும் பொழுது முடிந்தவரை தங்க நகைகளை புதன்கிழமையில் அல்லது வெள்ளிக்கிழமையும் செய்யலாம்.
நகைகளை வெள்ளிக்கிழமை நாம் அணிந்திருக்கும் போது கழட்டக்கூடாது என்பார்கள் அந்த காரணத்தினால் முடிந்த அளவிற்கு புதன்கிழமையை நகைகளை கழற்றி சுத்தம் செய்து பின் சிறிது நேரத்திலேயே மறுபடியும் அணிந்து கொள்ளுங்கள்.
அதே போன்று பலரும் தாலிக்கொடியை தங்கத்தினால் செய்திருப்பார்கள் அவர்கள் எக்காரணம் கொண்டு தாலிக்கொடியை கழற்றி சுத்தம் செய்யக்கூடாது. அதற்கு பதிலாக குளிக்கும் போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
தங்கம் வைக்கும் இடம் நீங்கள் பீரோவில் அல்லது உங்கள் வீட்டிலும் தங்க நகைகள் வைப்பதற்கு தனி இடம் ஒதுக்கி வைத்திருப்பீர்கள் அது போன்ற இடங்களில் நகையே ஒன்றோடு ஒன்று ஒரசும் படி மொத்தமாக போட்டு வைக்காமல் மஞ்சள் நிறத்திலோ அல்லது பச்சை நிறத்தில் உள்ள காட்டன் துணியை விரித்து வைக்க வேண்டும்.
இந்த இரண்டு நிற துணிகளையும் பயன்படுத்துவது நல்லது அம்மனுக்கு உகந்த நிறங்கள். மஞ்சள் நிறம் பயன்படுத்துவது இன்னும் சிறந்ததாக இருக்கும் அது உங்கள் வீட்டிற்கு மங்களகரத்தை கொடுக்கும்.
தங்கம் வாங்குதல் அதேபோல் நீங்கள் கடைகளுக்கு தங்கம் வாங்கும் செல்லும்போது முடிந்த அளவிற்கு குடும்ப உறுப்பினர்களையும் அல்லது நெருங்கிய உறவினர், நண்பர்களை மட்டும் கூட்டி செல்லவும். எனென்றால் தங்கம் வாங்கும் போது மனம் சங்கடப்படலாகாது என்று ஒரு வழக்கம் உள்ளது.
இவ்வாறு நாம் தங்கத்தை பேணிப்பாதுகாத்து சுத்தமாக ஆன்மீக முறையில் வைத்திருந்தால் உங்களுக்கு எப்போதும் தங்க யோகமே.