ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரன் பேபி ரன் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

#Cinema #TamilCinema #Film #Director #Lanka4
Kanimoli
1 year ago
ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான ரன் பேபி ரன் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

பொதுவாக ஆர்ஜே பாலாஜி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படியான காமெடி படங்களில் தான் நடித்து வருவார். அதிலும் நயன்தாரா கதாநாயகியாக நடித்த மூக்குத்தி அம்மன் படம் இவரை வேற லெவலில் ரசிகர்களிடம் கொண்டு சென்றது. இப்போது ரன் பேபி ரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மற்ற படங்களை காட்டிலும் ரன் பேபி ரன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். அதாவது திரில்லர் கலந்த படமாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரன் பேபி ரன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

சமீபகாலமாக படம் வெளியான ஒரு வாரத்திலேயே படக்குழுவினர் வெற்றி விழா கொண்டாடி வருகிறார்கள். விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் படுதோல்வி அடைந்த நிலையில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடினார்கள். அதேபோல் இப்போது ஆர் ஜே பாலாஜியும் ரன் பேபி ரன் படத்திற்கு சக்சஸ் பார்ட்டி கொண்டாடி உள்ளார்.

அதில் நாங்கள் நினைச்சதை விட படம் ரொம்ப நல்லா ஓடினதாக பேசியதுதான் அந்த நிகழ்ச்சியில் மிகப்பெரிய காமெடி. இந்த படம் போட்ட வசூலை கூட எடுக்குமா என்பது சந்தேகம். இப்படி தயாரிப்பாளர் பயந்து கொண்டிருக்கும் நிலையில் அவரே உருட்டு உள்ளார். அதாவது மீண்டும் வருங்காலத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் பணியாற்றுவேன் என உறுதியளித்துள்ளாராம்.

அதுமட்டுமின்றி ரன் பேபி ரன் சக்சஸ் பார்ட்டியில் ஐசரி கணேஷ் தங்க மோதிரத்தை ஆர் ஜே பாலாஜிக்கு பரிசாக வழங்கி உள்ளார். ஏனென்றால் ஆர் ஜே பாலாஜி அடுத்ததாக நடித்து வரும் சிங்கப்பூர் சலூன் படத்தை இவர் தான் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தைப் போல என் படத்தையும் மோசம் செய்து விடாதீர்கள் என்று சூசகமாக தயாரிப்பாளர் தங்க மோதிரத்தை ஆர் ஜே பாலாஜிக்கு வழங்கியதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனாலும் ஆர் ஜே பாலாஜி விலை போகாத ரன் பேபி ரன் படத்திற்கு இவ்வளவு பில்டப் கொடுப்பது ரசிகர்களை சிரிக்க தான் வைக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!