துருக்கிக்கு ஆதரவாக அரைக்கம்பத்தில் பறக்கும் நோட்டோ தலைமையகத்தில் உள்ள கொடிகள்

#Earthquake #Turkey #Death #துருக்கி #நிலநடுக்கம் #world_news #Tamilnews #Lanka4
Prasu
1 year ago
துருக்கிக்கு ஆதரவாக அரைக்கம்பத்தில் பறக்கும் நோட்டோ தலைமையகத்தில் உள்ள கொடிகள்

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. 

இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். 

இந்த நிலநடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்தான், கிரீன்லாந்து போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவுவதற்காக இந்தியா போன்ற பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றது. இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மருத்துவர்களும் நிவாரண பொருட்களும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் நோட்டோ நாடுகளில் இருந்தும் 1400 மீட்பு படையினரும் நிவாரண பொருட்களும் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள நோட்டோ தலைமையகத்தில் உள்ள கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!