பொலிஸ் சீருடை அணிந்த இளைஞர்கள் கைது

#Police #Arrest #Tamilnews #Lanka4 #sri lanka tamil news #Investigation
Prathees
3 years ago
பொலிஸ் சீருடை அணிந்த  இளைஞர்கள் கைது

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஒம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான வகையில் காரை சோதனையிட்டுள்ளனர்.

காருக்குள் பொலிஸ் சீருடை அணிந்த 2 பேர் இருந்தனர்.

அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னர், காரும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி நம்பர் பிளேட்டுகளும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இன்று (09) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்காக பயணித்தார்களா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4