சூர்யாவுமில்லை என் .டீ .ஆர் உம் இல்லை பிரபல நடிகருக்கு கொக்கி போட்ட வெற்றிமாறன்

#Director #Film #India #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
சூர்யாவுமில்லை என் .டீ .ஆர் உம் இல்லை பிரபல நடிகருக்கு கொக்கி போட்ட வெற்றிமாறன்

வெற்றிமாறன் பல வருடங்களாக விடுதலை படத்தை இயக்கி வருகிறார். சூரி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

இதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி ஜூனியர் என் டி ஆர் ஐ வைத்தும் ஒரு படம் வெற்றிமாறன் இயக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் ஜூனியர் என்டிஆர் படம் 2025 ஆம் ஆண்டு தான் ரிலீஸ் ஆகிறதாம்.

இந்த படத்தின் ரிலீஸுக்கு தற்போது மூன்று வருட கால அவகாசம் உள்ளதால் வெற்றிமாறன் வேறு ஒரு பிரபல ஹீரோவின் படத்தை இயக்க இருக்கிறார். அதாவது ஏற்கனவே வெற்றிமாறன் கமலை வைத்து ஒரு படம் இயக்குவது உறுதியாகி இருந்தது. இப்போது உலக நாயகன் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

இப்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்து விட்டதாம். ஆகையால் அடுத்ததாக வெற்றிமாறன் கமல் படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் சூர்யா தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து கார்த்தியின் கைதி 2 படத்தையும் இயக்க உள்ளாராம். ஆகையால் இந்த படங்களில் சூர்யா நடிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் விக்ரம் படத்திலேயே இவரது ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது.

இவ்வாறு சூர்யாவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தொடர்ந்து உள்ளதால் வாடிவாசல் படத்தை சற்று தள்ளி போட்டு உள்ளார். அதற்குள் வெற்றிமாறன் கமலை வைத்து ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!