ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Parliament #government #Tamilnews
Mayoorikka
3 years ago
 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்!

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான இரண்டு நாள் விவாதம் இன்று(9) மற்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

 ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி நேற்றைய தினம் உரையாற்றியிருந்தார். குறித்த உரை மீதான விவாதம் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்ற நிகழ்வை புறக்கணித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று(9) மற்றும் நாளையும்(10) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4