உங்கள் வீட்டில் மேற்கொள்ளும் காரியங்கள் மூலம் தரித்திரம் ஏற்படாமல் இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை.
#ஆன்மீகம்
#வீடு
#மகாலட்சுமி
#தகவல்
#லங்கா4
#spiritual
#Home
#money
#information
#Lanka4
Mugunthan Mugunthan
1 year ago
பொதுவாக நம் வீட்டில் பெரியவர்கள் நாம் மேற்கொள்ளும் சில காரியங்களைக் கண்டதும் அப்படி செய்யாதேயடா என்று நம் வீட்டை தரித்திரம் பிடித்து விடும் என்பார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
அப்படி செய்தால் நாம் இதுவரை அனுபவிக்காத அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்து விடுவோம் பணக்கஷ்டம், வறுமை, கடன் பிரச்சனை, மன உளைச்சல் குடும்பத்தில் நிம்மதி இருக்காது, சந்தோஷம் இருக்காது. இப்படி உங்கள் வீட்டில் ஒன்று ஒன்றாக தொலைந்து கொண்டே போகும் இறுதியில் சோகங்கள் மட்டுமே வீட்டு ஆட்கொள்ளும். இது நமக்கு தேவைதான?
எனவே நாம் வீட்டில் சில காரியங்களை செய்யும் போது ஆன்மீக ரீதியில் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
- உங்கள் வீட்டில் இருக்கும் வாசற்படி மாவு ஆட்டுவதற்கு, மசாலா அரைப்பதற்கு பயன்படுத்தும் உரல், ஆட்டுக்கல, அம்மி இவைகளில் உட்கார்ந்து பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
- நீங்கள் யாருடனும் பணம் கொடுக்கல் வாங்கலின் போது வாசல் படியில் நின்று வாங்கவும் கூடாது கொடுக்கவும் கூடாது. ஒன்று நீங்கள் வாசப்படிக்கு வெளியே சென்று விடுங்கள் இல்லை அவரை உள்ளே கூப்பிட்டு விடுங்கள்.
- உங்கள் வீட்டில் இருக்கும் வெற்றிலைகள், வாழை இலைகள் போன்றவற்றை வாடி போக விடக்கூடாது இப்படி வாட விட்டால், உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் இல்லாமல் போய்விடும்.
- வெற்றிலைகளை வெறும் தரையில் வைக்க கூடாது. பிரம்மச்சாரிகளாக இருப்பவர்கள் தாம்பூலம் உட்கொள்ள கூடாது. நம் வீட்டில் பயன்படுத்தும் உப்பை எக்காரணம் கொண்டும் தரையில் சிந்த விடக்கூடாது.
- அரிசியை நாம் அலசும் போதும் தரையில் சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் வீடு கூட்டும் போது வீட்டில் உள்ள மூலை பகுதிகளில் குப்பை குவித்து வைக்க கூடாது.
- உங்கள் வீட்டில் தூசி, ஒட்டடை போன்றவை சேரவிடாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல இரவில் வீட்டை கூட்டினால் குப்பையை எக்காரணம் கொண்டும் வெளியே கொட்ட கூடாது. சாதம், நெய், உப்பு இவைகளை வெறும் கைகளால் பரிமாறக்கூடாது கரண்டியால் மட்டுமே பரிமாற வேண்டும்.
- நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் ஆடைகள் துணிமணிகள் சிதறி கிடக்க கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை போட தனியாக ஒரு இடம் ஒதுக்கி இல்லை ஒரு பெட்டி தயார் செய்து அதை அந்த பெட்டியில் போட்டு வைக்க வேண்டும்.
- நமது வீட்டில் எப்போதும் நல்ல வாசனை இருக்கும்படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமது வீட்டில் பணம், செல்வங்கள் சேரும் தேவையில்லாத செலவுகள் குறைந்து செல்வ செழிப்புடன் வாழ இதை செய்யுங்கள்