12 ராசிக்காரர்களில் பேரதிஷ்டம் பெறப்போகும் மூன்று ராசியினர் , அதிலும் கும்ப ராசியினருக்கு - இன்றைய பலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #Astrology
Prasu
1 year ago
12 ராசிக்காரர்களில் பேரதிஷ்டம் பெறப்போகும் மூன்று ராசியினர் , அதிலும் கும்ப ராசியினருக்கு - இன்றைய பலன்

மேஷம்
அசுவினி : தடைபட்டிருந்த செயல்கள் நடந்தேறும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
பரணி : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1 : உங்கள் முயற்சி நிறைவேறும். நினைத்தவற்றை நினைத்தபடி சாதித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : காலையில் இருந்து இழுபறியான வேலை மதியத்திற்குள் முடிவிற்கு வரும்.
ரோகிணி : வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.
மிருகசீரிடம் 1, 2: மதியத்திற்கு மேல் ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : விஐபிகள் ஆதரவால் உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் சரியாகும்.
திருவாதிரை : பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவுறும்.
புனர்பூசம் 1, 2, 3 : மறைமுகத் தொல்லை விலகும். பெற்றோரின் ஆதரவால் உங்கள் தேவை நிறைவேறும்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்கள் செயல்களில் மதியத்திற்கு மேல் பின்னடைவு ஏற்படும். அரசு பணிகளில் கவனம் அவசியம்.
பூசம் : நீங்கள் திட்டமிட்டிருந்த வேலைகளை மதியத்திற்குள் முடிப்பீர்கள். அதன்பின் செயல்களில் கவனம் தேவை.
ஆயில்யம் : மதியத்திற்கு மேல் தாய்வழி உறவுகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்

சிம்மம்
மகம் : காலையில் தாமதம் என்ற நிலை இருந்தாலும் அதன் பின் உங்கள் செயலில் வெற்றி கிடைக்கும்.
பூரம் : எதிர்பார்த்தவற்றில் ஆதாயமான நிலை உண்டாகும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திரம் 1: தடைகளை சரி செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சி நிறைவேறும்.

கன்னி: 
உத்திரம் 2, 3, 4: காலையில் இருந்த நிலை மாறும். பொருள்களை கையாள்வதில் கவனம் தேவை
அஸ்தம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.
சித்திரை 1, 2: மனதில் இருந்த குழப்பம் விலகும். புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : மதியத்திற்கு மேல் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சுவாதி : இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
விசாகம் 1, 2, 3: செலவுகள் கட்டுக்குள் அடங்கும். உங்கள் ஆற்றல் வெளிபடும் நாள்.

விருச்சிகம்: 
விசாகம் 4 : காலையில் இருந்து அலைச்சலும் செலவுகளும் ஏற்பட்டாலும் நன்மை உண்டு.
அனுஷம் : காலையில் நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். மதியத்திற்கு மேல் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும்.
கேட்டை: விறு விறுப்பாக செயல்பட்டு முயற்சிகளில் லாபம் காணும் நாள்.

தனுசு: 
மூலம் : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
பூராடம் : திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். எதிர்பாராத ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் 1: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்

மகரம்
உத்திராடம் 2, 3, 4: தடை பட்டிருந்த வேலை முடியும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : செயல்களில் இருந்த சங்கடம் விலகும். பண வரவு தாராளமாக வரும் நாள்.
அவிட்டம் 1, 2 : உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் வழியே உங்கள் எண்ணம் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி மாறும். உங்கள் செயல் வெற்றியாகும்.
சதயம்: பல வகையில் முயற்சித்தும் இழுபறியாக இருந்த வேலையில் இன்று லாபம் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : சங்கடங்களில் இருந்து மீள்வீர்கள். உங்கள் அறிவாற்றலால் முயற்சி ஒன்று நிறைவேறும்.

மீனம்: 
பூரட்டாதி 4 : காலையில் இருந்து செயல்களில் லாபம் காண்பீர். மாலையில் பின்னடைவு ஏற்படும்.
உத்திரட்டாதி : சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிர்பாராத பிரச்னைகளும் நெருக்கடிகளும் தோன்றும்.
ரேவதி: உங்கள் எண்ணம் நிறைவேறுவதில் ஆர்வம் காட்டுவீர் என்றாலும் செயல்களில் சங்கடம் ஏற்படும்.