மற்றொரு வெளிநாட்டு வேலை மோசடி: இருவர் கைது

#Arrest #Badulla #Police #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
3 years ago
மற்றொரு வெளிநாட்டு வேலை மோசடி: இருவர் கைது

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம்  (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் லுனுகல பிரதேசத்தை சேர்ந்த 40 மற்றும் 42 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4