ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்து சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

#Arrest #Police #SriLanka #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Kanimoli
3 years ago
ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்து  சுற்றிவளைப்பில்  பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது

 ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற முகநூல் விருந்தொன்றை சுற்றிவளைத்து பெண் ஒருவர் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ​​கஞ்சா வைத்திருந்த 07 சந்தேகநபர்கள், போதை கெப்சல்கள் வைத்திருந்த 03 சந்தேகநபர்கள், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் மற்றும் சட்டவிரோத சிகரெட்க்களை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, போதை மாத்திரைகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 முதல் 27 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் இன்று (13) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4