மின் இணைப்புடன் ஆதார் இணைக்க இனி அவகாசம் நீட்டிக்கப்படாது என மின்வாரிய துறை தகவல்
கடைசி நாளான பிப்ரவரி 15-ம் தேதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்த இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்காக நவம்பர் 28ஆம் தேதி முதல் இணைப்புப் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் கால அவகாசம் அளித்துள்ளது. சிலர் இன்னும் இதைச் செய்யவில்லை.
கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும், ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆதார் எண்ணை இணைப்பில் இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.