வாழ்க்கை மற்றும் வியாபாரத்தில் அதிஷ்டம் அடையவுள்ள மூன்று ராசிக்காரர்கள் - இன்றைய விஷேட ராசிபலன்கள்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology #Lanka4
Prasu
1 year ago
வாழ்க்கை மற்றும் வியாபாரத்தில் அதிஷ்டம் அடையவுள்ள மூன்று ராசிக்காரர்கள் - இன்றைய விஷேட ராசிபலன்கள்

மேஷம்
அசுவினி : பிறரின் ஆலோசனைகளைக் கேட்டு செயல்பட வேண்டாம். அதனால் பிரச்னை தோன்றும்.
பரணி : உறவினர் ஒருவரால் சங்கடம் ஏற்படும். அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
கார்த்திகை 1 : வெளியூர் பயணத்தில் கவனம் தேவை. நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
ரோகிணி : சவாலான வேலைகளை கூட சாதாரணமாக செய்து முடிப்பீர். நண்பர்கள் ஆதரவு அதிகமாகும்.
மிருகசீரிடம் 1, 2 : விஐபிகள் ஆதரவுடன் உங்கள் செயல்களில் வெற்றி காண்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளைத் தீர்த்து வைப்பீர். எதிரிகள் உங்களிடம் சரணடைவர்.
திருவாதிரை : சொத்து விவகாரத்தில் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.
புனர்பூசம் 1, 2, 3 : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முயற்சியில் ஈடுபடுவீர். எதிர்பார்த்த வரவு வரும்.
பூசம் : உங்கள் உதவியை எதிர்பார்த்து உறவினர் வருவார்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்த வேலையை அடுத்தவரின் உதவியுடன் நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்
மகம் : எதிர்பாராத பயணம் உண்டாகும் என்றாலும் அதனால் லாபம் அடைவீர்.
பூரம் : நீங்கள் சந்திக்க நினைத்தவர்களை இன்று சந்திப்பீர்கள். நண்பர்களிடம் ஏற்பட்ட சங்கடம் தீரும்.
உத்திரம் 1 : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர். தடையைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் வாழ்க்கைக்கான தைரியமான ஒரு முடிவை எடுப்பீர்கள். வெற்றிகரமான நாள்.
அஸ்தம் : பெற்றோர் வழியில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். உங்கள் திறமை வெளிப்படும்.
சித்திரை 1, 2 : உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர், கெட்டவர் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடிவிற்கு வரும் நாள்.
சுவாதி : வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 : கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சியில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படும்.

விருச்சிகம்
விசாகம் 4 : எளிதாக முடிய வேண்டிய வேலைகளும் இழுபறியாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
அனுஷம் : ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்கள் வழக்கமான செயல்களிலும் தடுமாற்றம் ஏற்படும்.
கேட்டை: அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.

தனுசு
மூலம் : வீண் அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும்.
பூராடம் : மறைமுக எதிரிகளால் தொல்லை உண்டாகும். எதிர்பாராத செலவுவால் நெருக்கடி உண்டாகும்.
உத்திராடம் 1 : தொழிலில் பணியாளர்களிடம் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : திட்டமிட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.
திருவோணம் : உங்களுக்கு வர வேண்டிய பணம் வீடு தேடி வந்து சேரும் நாள்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை சாதிப்பீர்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : பணியாளர்களின் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
சதயம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்கள் கைக்கு வரும். மற்றவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி பாராட்டு பெறுவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
உத்திரட்டாதி : மனதில் இருந்த குழப்பம் நீங்கும். விலகிச் சென்ற உறவினர் தேடி வருவார்கள்.
ரேவதி : இழுபறியாக இருந்த செயல் ஒன்று நிறைவேறும். நிதிநிலை உயரும் நாள்.