நகரியில் அருள்மிகு திருபுரசுந்தரி சமேத சந்திரமௌலிஸ்வரர் ஆலயத்தில் 9 அடி உயர கஜசம்ஹார மூர்த்தி மகா சிவராத்திரி சிறப்பு தரிசனம்
நகரியில் அருகிலுள்ள கீளப்பட்டு கிராமத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி சமேத சந்திரமௌலிஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்தில் மகா சிவராத்திரி ஒட்டி பிரம்மாண்டமான சிவ வடிவங்களை இயற்கை பொருட்களைக் கொண்டு செய்து வழிபாடு செய்வது வழக்கம். இப்பணிகளை சில நாட்களுக்கு முன்பாகவே அடியார் பெருமக்கள் மகாசிவராத்திரிக்கு ஏற்பாடு செய்வார்கள். 27 நாள்கள் தொடர் முயற்சியினால் 1,500 பிரண்டைக் கொடித் துண்டுகள், உன்மத்தை காய்கள் மற்றும் வில்வக்காய்கள் கொண்டு உருவாக்கப்பட்ட 9 அடி உயர கஜ சம்ஹார மூர்த்தியின் கம்பீரமான நடனத் திருமேனியைக் கண்குளிர கண்டு தரிசிக்கலாம்.
அதேபோல் இவ்வாண்டு நகரி சிவாலயத்தில் ஈசனின் சபத தாண்டவத்தின் ஒன்றாக போற்றப்படும், தாண்டவ ரூபதிருமேனி பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. கஜசம்ஹார ஆராதாண்டவம் என்பது தாருகா வனத்து முனிவர்களின் ஆணவத்தை அடக்க அவர்கள் ஏவிய யானையை அளித்து ஈசன் நிகழ்த்தியது இத்தாண்டவம். சிவபெருமானின்கஜசம்ஹார தாண்டவங்களில் ஒன்றான இத்தாண்டவத்தை களிற்றுரி மற்றும் குஞ்சரம் என்று அழைப்பதுண்டு.
மகாசிவராத்திரி சனி மஹா பிரதோஷத்துடன் இணைந்து வருகிறது.அத்தகைய திருநாளில், நகரி-கீளப்பட்டு கிராமம், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து இ்ங்கு எழுந்தருளியுள்ள கஜசம்ஹார மூர்த்தியை வழிபடும் பக்தர்களுக்கு நிர்மலமான நல்வாழ்க்கையும்; தீங்கும், நோய் நொடியும் நெருங்காப் பெரும் பாக்கியமும் அருளிப்பார் சிவபெருமான்.