முன்னாள் சட்ட துறை அமைச்சர் சி வி சண்முகம் தேர்தல் ஆணையத்து மீது ஆவேசம்

#Tamilnews #Election #Tamil People #sri lanka tamil news
Mani
1 year ago
முன்னாள் சட்ட துறை அமைச்சர் சி வி சண்முகம் தேர்தல் ஆணையத்து மீது ஆவேசம்

ஈரோடு இடைத்தேர்தலில்  முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார், அவர் தேர்தல் ஆணைய செயல்பாடுகள்,  காவல்துறை செயல்பாடுகள்,  திமுகவையும் நேரடியாக விமர்சித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக அதிமுக  சார்பில் தேர்தல் ஆணையத்திடும் ஒரு புகார் அளிக்கப்பட்டது. அதில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்படாமல் உள்ளது என குறிப்பிட்டுள்ளது.இந்த புகார் மீது  இந்திய தேர்தல் ஆணையமும், மாநில தேர்தல் ஆணையமும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கூறினார்.

தொகுதி முழுவதும் தேர்தல் அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் ஆளுங்கட்சி கூட்டணி உள்ள வேட்பாளர்களுக்கு மட்டும் போதிய அனுமதி வழங்குகின்றனர். அனைத்து கட்சிக்கும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கும் உரிமை உண்டு. ஜனநாயக உரிமை இந்த தொகுதியில் பறிக்கப்பட்டுள்ளது. 

 தி.மு.க. சார்பாக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மிகப்பெரிய தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறார். வாக்காளர்களை ஒவ்வொரு பூத்துக்கு அழைத்து சென்று 3 வேலை உணவு கொடுத்து ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் கொடுத்து இரவில் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள். இதன் மூலம் எங்களுக்கு வாக்காளர்களை சந்திக்கும் வாக்கு கேட்கும் உரிமை மறுக்கப்படுகிறது. காவல்துறை அதிமுக நிர்வாகிகள் செல்லும் வாகனத்தை வழி மறித்து சோதனை என்ற பெயரில் பல நெருக்கடிகளை தந்து வருகின்றனர், 

மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக இதில் தலையிட்டு ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தி.மு.க.வினர் அழைத்து சென்று அடைத்து வைத்துள்ள வாக்காளர்களை விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் வாக்கு சேகரிக்கும் உரிமையை செய்து தர வேண்டும். இல்லையெனில் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைமை வரும்.