தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் கடக ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்கள்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன் #Astrology
Prasu
1 year ago
தனவரவை பெறப்போகும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் கடக ராசிக்காரர்களுக்கு - இன்றைய ராசிபலன்கள்

மேஷம்
அசுவினி : வருமானம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றி மகிழும் நாள்.
பரணி : நிதி நிலையில் இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் ஈடுபடும் செயலில் முன்னேற்றம் ஏற்படும்.
கார்த்திகை 1 : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று வெற்றியாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் எதிர்பார்த்த பலன்களை இன்று அடைய முடியாமல் போகும்.
ரோகிணி : உங்கள் முயற்சியில் இன்று பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும் நாள்.
மிருகசீரிடம் 1, 2 : செயல்களில் கவனம் தேவை. சிலரால் சங்கடங்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உதவியால் ஒரு எண்ணம் நிறைவேறும்.
திருவாதிரை : குடும்ப உறவினர்களிடம் ஒற்றுமை உண்டாகும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: வருவாயில் இருந்த சங்கடங்களை சரி செய்வீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.

கடகம்
புனர்பூசம் 4 : இழுபறியாக இருந்த ஒரு செயல் உங்களுக்கு சாதகமாக முடியும் நாள்.
பூசம் : தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வழக்கு சாதகமாகும்.
ஆயில்யம் : எதிர்த்து செயல்பட்டவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். ஆரவாரம் வேண்டாம்.

சிம்மம்
மகம் : பிள்ளைகளுக்காக மற்ற வேலைகளை ஒதுக்கி வைப்பீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
பூரம் : உங்கள் செல்வாக்கு வெளிப்படும் மற்றவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை சாதிப்பீர்கள்.
உத்திரம் 1 : பெற்றோரின் ஆலோசனை நன்மை தரும். குடும்பத்தினர் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் மனம் காட்டும் வழியில் செல்வீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அஸ்தம் : புதிய சொத்து ஒன்று வாங்குவீர்கள். நீங்கள் விரும்பிய வகையில் செயல்படுவீர்கள்.
சித்திரை 1, 2 : நேற்றைய விருப்பம் ஒன்று நிறைவேறும். எதிர்பாராத வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4 : நீங்கள் நினைத்ததை சாதித்து மகிழ்வீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.
சுவாதி : ஒரு சில நெருக்கடி இருந்தாலும் இன்று முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: துணிச்சலுடன் செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும்.

விருச்சிகம்
விசாகம் 4 : சேமிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அனுஷம் : வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.
கேட்டை : புதிய வேலைக்காக நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். குடும்பத்தில் திருமணப்பேச்சு எழும்.

தனுசு
மூலம் : உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. செயல்களில் தடுமாற்றமும் குழப்பமும் மிஞ்சும்.
பூராடம் : செயலில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
உத்திராடம் 1: நெருக்கடிகளால் சங்கடப்படுவீர். திட்டமிட்ட செயலில் ஈடுபட முடியாமல் போகும்.

மகரம்: 
உத்திராடம் 2, 3, 4 : எதிர்பாராத செலவுகளால் சங்கடப்படுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும்.
திருவோணம் : உங்கள் செல்வாக்கை வெளிக்காட்டுவதற்கு செலவு செய்யும் நாள்.
அவிட்டம் 1, 2 : செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும்

கும்பம்
அவிட்டம் 3, 4 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் வெற்றியாகும். நிதிநிலை உயரும்.
சதயம் : பழைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். பொன் பொருள் சேர்க்கையில் கவனம் செல்லும்.
பூரட்டாதி 1, 2, 3 : நண்பர்கள் ஒத்துழைப்பால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும்.

மீனம்
பூரட்டாதி 4 : குடும்பத்தினர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பழைய பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
உத்திரட்டாதி : வியாபாரத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
ரேவதி : எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.