இந்திய-ஜப்பான் கூட்டு ராணுவ போர் பயிற்சி இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு.

#India #Japan #world_news
Mani
1 year ago
இந்திய-ஜப்பான் கூட்டு ராணுவ போர் பயிற்சி இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு.

ஜப்பானின் ஷிகா மாகாணத்தில் உள்ள இமாசு முகாமில் இந்திய-ஜப்பானிய ராணுவம் "தர்மா கார்டியன்" என்ற ராணுவப் பயிற்சியை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி மார்ச் 2ம் தேதி வரை தொடரும். தற்போதைய சர்வதேச சூழலில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு கவலைகள் நிறைந்த சூழலில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு என இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவினரும், ஜப்பான் ராணுவத்தின் தரைப்படை பிரிவினரும் பயிற்சியில் கடந்த 12ம் தேதி இணைந்தது. வனப்பகுதிகள், நகர்ப்புறங்கள், சிறு நகரங்கள் உள்ளிட்ட பல இடங்களில் ராணுவம் பயிற்சி பெற்று வருகிறது.

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியானது இரு நாட்டு ராணுவங்களும் தங்களது அனுபவங்களையும், தொழில்நுட்ப அறிவையும் பகிர்ந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் அதே வேளையில் உடல் தகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கவும், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் இது உதவும்.