தொழில் துறையில் விருத்தியடையும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் மேஷ ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
தொழில் துறையில் விருத்தியடையும் இரு ராசிக்காரர்கள் , அதிலும் மேஷ ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : வியாபாரத்தை விருத்தி செய்ய நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி முன்னேற்றம் தரும்.
பரணி : மேலதிகாரியுடன் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1 : புதிய முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி காண்பீர்கள். வருவாயில் இருந்த தடை விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: நேற்று இருந்த நெருக்கடி விலகும். உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும்.
ரோகிணி : நீங்கள் நினைத்ததை இன்று அடைவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: தடைகளைத் தாண்டி முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : உங்கள் எதிர்பார்ப்பில் பின்னடைவும், மனதில் குழப்பமும் உண்டாகும்.
திருவாதிரை : செயல்களில் நிதானத்துடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத நெருக்கடி ஏற்படும்.
புனர்பூசம் 1, 2, 3: புதிய முயற்சியில் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளி போகும்.

கடகம்
புனர்பூசம் 4 : நண்பர்கள் ஆதரவுடன் நேற்றைய பிரச்னைக்கு முடிவு காணும் நாள்.
பூசம் : உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். நீங்கள் நினைத்தவற்றில் லாபம் காண்பீர்கள்.
ஆயில்யம் : வாழ்க்கைத் துணை வழிகாட்டுதலால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்
மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பகைவர்கள் விலகுவார்கள்.
பூரம் : உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
உத்திரம் 1 : உங்கள் செயலில் உண்டான தடை விலகும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: முயற்சியில் தடைகளை சந்தித்தாலும் போராடி வெல்வீர்கள். எதிர்பார்த்த வரவு வரும்.
அஸ்தம் : விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை விலகும்.
சித்திரை 1, 2: உங்கள் கையை விட்டுப்போன ஒப்பந்தம் மீண்டும் உங்களிடம் வந்து சேரும் நாள்.

துலாம்
சித்திரை 3, 4 : சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் சங்கடத்தை உண்டாக்கும். கவனம் தேவை.
சுவாதி : மற்றவர் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.
விசாகம் 1, 2, 3: நீங்கள் நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள கடுமையாக முயற்சிப்பீர்கள்

விருச்சிகம்
விசாகம் 4 : உங்கள் செல்வாக்கு உயரும். நண்பர்கள் ஆதரவுடன் நினைத்ததை சாதிப்பீர்கள்.
அனுஷம் : குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் நகை, வாகனம் என வாங்கி மகிழ்வீர்கள்
கேட்டை : உங்கள் திறமை வெளிப்படும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும்.

தனுசு
மூலம் : எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.
பூராடம் : குழப்பம் விலகும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
உத்திராடம் 1 : சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : பழைய பிரச்னை ஒன்றால் இன்று சங்கடத்திற்கு ஆளாகும் நாள்.
திருவோணம் : எதிர்பார்ப்பு தள்ளிப்போகும் என்பதால் செயல்களில் குழப்பம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 : உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாமல் போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : அரசு வழியில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும் நாள்.
சதயம் : பொன் பொருட்களை விற்று புதிய முயற்சியை மேற்கொள்வீர். செலவில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3 : நீங்கள் எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

மீனம்
பூரட்டாதி 4 : புதிய தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசு வழியிலான எதிர்பார்ப்பு லாபமாகும்.
உத்திரட்டாதி : உங்கள் செல்வாக்கு உயரும். திட்டமிட்டு செயல்பட்டு அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள்.
ரேவதி : நீங்கள் எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். நேற்றைய பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.