நகை வேண்டாம் பட்டுப்புடவை மட்டும் போதும் திருவண்ணாமலையில் விசித்திர திருடன்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கட்சிரப்பட்டு கிராமத்தில் சம்பத் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார், அவர் தமிழ்நாடு அரசு பேருந்து கழகத்தில் நடத்துனராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார் சம்பத்தும் அவர் மனைவியும் உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக புதுச்சேரிக்கு சென்ற நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை கடப்பறையால் உடைத்து உள்ளே சென்று வீட்டில் உள்ள அனைத்து அறையிலும் இருந்த துணிமணிகளை கீழே உதறி தள்ளிவிட்டு பின்னர் பூஜை அறைக்கு மேலே வைக்கப்பட்டிருந்த பித்தளை பாத்திரங்கள் மற்றும் பட்டுப் புடவைகளில் அங்கிருந்து அள்ளிச் சென்றுள்ளனர்.
இதைகுறித்து தச்சம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது இதைத்தொடர்ந்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு நிலையில் , கொள்ளையன் கண் எதிரிலேயே 20 சவரன் தங்கள் சங்கிலிகள், மோதிரம் மற்றும் 60 ஆயிரம் ரூபாய், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை அங்கேயே இருந்த போதிலும், அவர்கள் எடுத்துச் செல்லாமல் பழைய பட்டுப் புடவைகள் பித்தளை பாத்திரங்கள் மட்டும் கொள்ளையடித்து சென்றது ஆச்சரியத்தை உருவாக்கியது.