வாழைத்தண்டு சாப்பிடுவதால் நிவர்த்தியாகும் உடற் கோளாறுகள்.

#ஆரோக்கியம் #வாழை #பயன்பாடு #தகவல் #லங்கா4 #Health #plantain #Benefits #today #Lanka4
வாழைத்தண்டு சாப்பிடுவதால் நிவர்த்தியாகும் உடற் கோளாறுகள்.

வாழைத்தண்டானது மிகவும் நார்ச்சத்து கொண்டதால் இது மனிதனின் குடலில் சிக்கி மணல், கற்களை விடுவிக்கவல்லது. சிறுநீர் கழிப்பதில் சிக்கல் உள்ளவர்களுக்கும் இது சிறப்பானதுடன் மலச்சிக்கலையும் தடுத்து நரம்புகள் சோர்வாவதைத் தடுக்கும்.

வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல் கூ​ட நீங்கிவிடும்.

வாழையின் உள் தண்டை சிறுசிறு துண்டுகளாக்கி, நாரை நீக்கி சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் கல் அடைப்பு நீங்கி, உடல் சூடு தணியும். சீதபேதி மற்றும் தாகம் ஆகியனவும் தணியும்.

வாழைத் தண்டு காதுநோய், கருப்பை நோய்கள், இரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்குவதோடு, வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும்.

வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை தேள், பூரான் ஆகியன கடித்த இடத்தில் தடவி வந்தால், கடியினால் ஏற்படும் வலி குறையும். கோழைக் கட்டு ஆகியவை இளகும். நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

வாழைத் தண்டைச் சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழப்பி தடவி வர தீப்புண்கள், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். வாழைப்பூச்சாற்றுடன் கடுக்காயைச் சேர்த்து அருந்தி வந்தால் மூலநோய், ஆசனக்கடுப்பு நீங்கும்.

வாழைப்பூச்சாற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கைகால் எரிச்சல், வெள்ளைபடுதல், மாதவிலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4