கருத்தில் வாத்தியை சாய்த்த பகாசூரன்..! பெண் குழந்தைகளுக்கான பாடம்

#Cinema #TamilCinema #Tamil Nadu #Tamilnews
Mani
3 years ago
கருத்தில் வாத்தியை சாய்த்த பகாசூரன்..! பெண் குழந்தைகளுக்கான பாடம்

வாத்தி - பகாசூரன் என்று, தனுஷ், செல்வராகவன் நடித்த இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி உள்ள நிலையில் பெண்குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டிய பாடத்தை, பகாசூரன் படத்தின் மூலம் இயக்குனர் மோகன்.ஜி தைரியமாக சொல்லி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


வாத்தியாக தனுஷ்ஷும், பகாசூரணாக செல்வராகவனும் திரையரங்கில் ருத்தர தாண்டவமாடி உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனுஷ் கட் அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிசேகம் செய்தனர்.


வாத்தி படத்தில் தனியார் கல்வி தாளாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தாலும், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய படத்தில் பெரும்பாலான காட்சிகள் தெலுங்கு சினிமா போல இருப்பதாக கூறப்படுகிறது.


செல்போன் பயன்படுத்தும் போது பெண்குழந்தைகளுக்கு பெற்றோர் சொல்லிக்கொடுக்க வேண்டிய எச்சரிக்கை பாடத்தை, பகாசூரன் படத்தின் மூலம் இயக்குனர் மோகன். ஜி தைரியமாக சமூகத்திற்கு சொல்லி இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4