இன்று மாசி அமாவாசையாகையால் முன்னோர்களுக்கு பித்ரு கடன் தீர்த்தல் தனிச்சிறப்பானது.

#ஆன்மீகம் #வணங்குதல் #இன்று #தகவல் #லங்கா4 #spiritual #worship #today #information #Lanka4
இன்று மாசி அமாவாசையாகையால் முன்னோர்களுக்கு பித்ரு கடன் தீர்த்தல் தனிச்சிறப்பானது.

இன்று மாசி அமாவாசையாகும். இந்நாளில் அன்னம், நீர் ஆகியன தானாமாக வழங்கி பல ஆயிரம் ஆண்டுகள் பித்ருக்களை திருததி செய்த பலன் உங்களை வந்தடையும் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

அமாவாசை நிறைவடையும் கடைசி ஒரு மணி நேரம் சதயம் நட்சத்திரமும் வருகிறது. இது பித்ருக்களுக்கு ஏற்ற நட்சத்திரமாகும். இந்த சமயத்தில் படையலிட்டு பித்ருக்களை வணங்குவது சிறப்பானது.

அமாவாசை என்பது முன்னோர் தர்ப்பணம், முன்னோர் வழிபாட்டிற்கு உரிய நாள் என்பது அனைவருக்கும் தெரியும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மார்கழி அமாவாசை போன்ற நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால், இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்.

இதில் மாசி மாதத்தில் வரும் அமாவாசை தனிச்சிறப்புடையது ஆகும்.  இந்த மாதத்தில் செய்யப்படும் வழிபாடுகளும், தானங்களும் இரு மடங்கான பலன்களை அள்ளி தரும் என புராணங்கள் சொல்கின்றன.

2023 ம் ஆண்டில் மாசி மாத அமாவாசை பிப்ரவரி 20 ம் தேதி திங்கள் கிழமை  இன்று வருகிறது. பிப்ரவரி 19 ம் தேதி மாலை 04.04 துவங்கி, பிப்ரவரி 20 ம் தேதி பிற்பகல் 01.47 வரை அமாவாசை திதி உள்ளது. அதற்கு பிறகு பிரதமை திதி வருகிறது. இதனால் பிப்ரவரி 20 ம் தேதியே அமாவாசை தினமாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே இன்று நீங்களும் விரதமிருந்து பித்ரு தோஷங்களை நீங்கப்பெற்று அவர்களின் ஆசியுடன் புண்ணியத்தைத் தேடுங்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!