படத்திற்கு வந்த பெரிய சிக்கலினால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் லியோ படக்குழுவினர்.

#Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
படத்திற்கு வந்த பெரிய சிக்கலினால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் லியோ படக்குழுவினர்.

பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் வாரிசு படம் ஒரு பக்கம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலேயே அடுத்த படத்திற்கு தயாராகினார் தளபதி. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். வேகமாக தொடங்கி லியோவின் ப்ரோமோ வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாகினர்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதத்தில் சென்னையில் நடைபெற்று தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டது. மொத்த படக்குழுவும் தனி விமானத்தில் கெத்தாக காஷ்மீருக்கு பறந்த நிலையில், இப்போது அந்தப் படப்பிடிப்பிற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டதால், விரத்தியில் லோகேஷ் இடிந்து போனார்.

ஏனென்றால் காஷ்மீரில் இந்த சமயத்தில் குளிர் மைனஸ் டிகிரியில் இருக்கும். படக்குழுவினரால் அங்கிருக்கும் சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆகையால் திடீரென லியோ படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்து மொத்த யூனிட்டும் சென்னை வருவதாக தகவல் வந்தது.

காலையில் படபிடிப்பு தொடங்கினால் கடும் குளிரில் கேமரா கூட வேலை செய்யாமல் போய்விடுகிறது. அதனால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனால் முடிவு செய்த நாட்களை விட இரண்டு மூன்று மடங்கு அதிக நாட்கள் செலவாகும்.

இதற்கு அனைவரும் தங்கும் செலவும் மூன்று மடங்கு அதிகரிக்கக்கூடும். அது படத்தின் பட்ஜெட்டை பாதிக்கும் என்பதால் சென்னையிலேயே படப்பிடிப்பை வைத்து விடலாம் என்று மூட்ட முடிச்சை கட்டிக்கொண்டு லியோ பட குழுவினர் கிளம்பி வந்து விட்டனர்.

ஏற்கனவே லியோ படம் 500 கோடி ப்ரீ பிசினஸ் ஆனதால் படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுத்து விஜய் வைத்து, ஒரு அள்ளு அள்ளி விடலாம் என யோசித்து தயாரிப்பாளர் தற்போது என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து உள்ளாராம். ஆனால் விஜய் மட்டும் எனர்ஜி குறையாமல் படக்குழுவினரின் பூஸ்டராக இருக்கிறார். லோகேஷுக்கும் அவர் பல ஐடியாக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!