கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயது இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரழப்பு

#Young #Youngster #Died #ChiefMinister #Tamil Nadu #sports #Heart Attack
Mani
1 year ago
கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயது இளைஞர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரழப்பு

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகே காசக்கரன்பட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் மாணிக்கம் . 26 வயதா இவர் கரூரில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை பார்த்து வருகிறார். கபடி போட்டியில் கலந்துகொண்டு விளையாடியும் வந்துள்ளார். இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்கப்பிள்ளை என்ற நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்பதற்காக நேற்று வந்துள்ளார்.

நேற்று மாணிக்கள் விளையாடிய அணி இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளத. இனுற மூன்றாவது சுற்று போட்டிக்காக வீரர்கள் ஓய்வு எடுத்து வந்தனர். இந்த நிலையில், மாணிக்கத்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அய்யர் மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ,சக வீரர்களும் நண்பர்களும் கடும் சோகமடைந்தனர். பொதுவாக, விளையாட்டு வீரர்கள் அடிக்கடி தங்கள் இதயத்தை பரிசோதித்து கொள்ள வேண்டும்.

இதய நோய் நம்மை அறியாமலேயே இருக்கலாம். ஆனால், இதயப் பரிசோதனை செய்து கொள்ளும் பழக்கம் இளைய தலைமுறையிடம் இல்லாததும் இது போன்ற இறப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.