திரட்டுப் பால் செஞ்சுருக்கீங்களா.? ட்ரை பண்ணிபாருங்க

#Recipe #Sweets #How_to_make #Preparation
Mani
3 years ago
திரட்டுப் பால் செஞ்சுருக்கீங்களா.? ட்ரை பண்ணிபாருங்க

தேவையான பொருட்கள்:

பால் – ஒரு லிட்டர்

வெள்ளம் – 300 கிராம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன்

நெய் – அரை ஸ்பூன்

செய்முறை:

ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி, கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும்.

அதனை அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்.

பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, சர்க்கரை அல்லது வெல்லம் போட்டு நன்றாக கலக்கவும். சிம்மில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.

இப்போது திரட்டுப்பால் ஒன்றாக சேர்ந்து வரும். அடுத்து நெய், ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி ஒரு கிண்ணத்தில் நெய் தடவி அதில் கொட்டி பரிமாறவும்.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4