ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளார் மகிழ்திருமேனி.

#Actor #Cinema #TamilCinema #Lanka4
Kanimoli
1 year ago
ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகரை தேர்வு செய்து வைத்துள்ளார் மகிழ்திருமேனி.

அஜித், மகழ்திருமேனி கூட்டணி கிட்டதட்ட உறுதியான நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட உள்ளது. மேலும் படப்பிடிப்பை விரைவில் தொடங்கி லியோ படத்திற்கு போட்டியாக வெளியிட திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலையில் லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகுவதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆகையால் லியோ படத்திற்கு போட்டியாக ஒரு படத்தை வெளியிட வேண்டும் என்றால் விக்னேஷ் சிவன் சரிபட்டு வரமாட்டார் என மகிழ் திருமேனியை தயாரிப்பு நிறுவனம் புக் செய்துள்ளது.

அதற்கு ஏற்றார் போல் மகிழ் ஏகே 62 படத்திற்காக தீயாய் வேலை செய்து வருகிறார். அந்த வகையில் லியோ படத்தில் கிட்டத்தட்ட 6 வில்லன்கள் என கூறப்படுகிறது. அதில் முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். இதைத் தவிர இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின் போன்றவர்களும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவ்வளவு நட்சத்திரங்கள் நடிப்பதால் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக மீண்டும் பிரபல நடிகரை மோத வைக்க உள்ளார் மகிழ்திருமேனி. அதாவது தடையறத் தாக்க மற்றும் தடம் போன்ற படங்களை அருண் விஜயை கதாநாயகனாக வைத்து மகிழ் படம் எடுத்திருந்தார்.

இந்த படங்கள் அருண் விஜயின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் ஏகே 62 படத்தில் அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைக்க மகிழ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஏற்கனவே அருண் விஜய் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவருடைய விக்டர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் இப்படத்தின் மூலம் தான் அருண் விஜய் தனது செகண்ட் இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கினார். ஆகையால் எப்போதுமே அஜித்தின் விசுவாசியாக அருண் விஜய் உள்ளார். இதனால் ஏகே 62 படத்தில் அஜித்துடன் மீண்டும் மோத அருண் விஜய் சம்மதித்துள்ளாராம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!