ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பிரபல வங்கமொழி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார்

#Cinema #Actress #Sexual Abuse
Mani
3 years ago
ஜிம் பயிற்சியாளர் ஒருவர்  பிரபல வங்கமொழி  நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக போலீஸ் நிலையத்தில் புகார்

பிரபல பெங்காலி நடிகையான பாயல் சர்க்கார் இந்தி படங்களில் நடிகராகவும் உள்ளார். பாஜகவுடன் இணைந்து வெப் சீரிஸ் மற்றும் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், ஜிம் பயிற்சியாளர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பாயல் பாரக்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், "எனது செல்போனில் தொடர்ந்து ஆபாசமான செய்திகள் வந்தன. அந்த எண்ணை சோதித்தபோது, ​​அது ஜிம் பயிற்சியாளர் என்பது தெரிந்தது. அவரும் எனக்கு தூரத்து உறவினர்.

அந்த எண்ணை பிளாக் செய்துவிட்டேன். விரைவில் அவர் மற்றொரு எண்ணிலிருந்து ஆபாசமான குறுஞ்செய்திகளையும் புகைப்படங்களையும் அனுப்பினார். அவரது விருப்பத்திற்கு நான் இணங்கவில்லை என்றால், எனது புகைப்படங்களை ஆபாசமான முறையில் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டினார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4