8 டிகிரி செல்சியஸ் குளிரில் குத்துச் சண்டை பயிற்சி எடுத்த சமந்தா !

#Cinema #TamilCinema #Tamilnews
Mani
3 years ago
8 டிகிரி செல்சியஸ் குளிரில் குத்துச் சண்டை பயிற்சி எடுத்த சமந்தா !

மயோசிடிஸ் நோயுடன் போராடி வரும் சமந்தா சில நாட்களுக்கு முன்பு
பழனி முருகன் கோவிலுக்கு சென்று தன் உடல்நலம் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்தார். 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அவர் 600 படி ஏறியதை பார்த்த ரசிகர்கள் கவலை உற்றார்கள் . படி ஏறுவது சரியல்ல  உடல்நலம் தான் முக்கியம் ரசிகர்கள் என
கருதினார்கள்.

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படம் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாக வேண்டியது. ஆனால் திடீர் என்று ரிலீஸை தள்ளிப் போட்டுவிட்டார்கள்.

பாலிவுட் நடிகர் வருண் தவானும், சமந்தாவும் உளவாளிகளாக நடித்து வரும் வெப்தொடர் இதை  சிடாடல்  ராஜ் மற்றும் டி.கே. இயக்கி வருகின்றனர். உளவாளியாக நடிப்பதால் வருணுக்கும், சமந்தாவுக்கும் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளன. அதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டரை அழைத்து வந்திருக்கிறார்கள். சிடாடல் தொடருக்காக நைனிடால் சென்றிருக்கிறார் சமந்தா. அங்கு 8 டிகிரி செல்சியஸ் குளிரில் குத்துச் சண்டை பயிற்சி பெற்றிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சமந்தா.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4