மயில்சாமி சம்பாதித்து சேர்த்து வைத்த மொத்த சொத்து விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

#Death #Cinema #TamilCinema #Actor #Lanka4
Kanimoli
1 year ago
மயில்சாமி சம்பாதித்து சேர்த்து வைத்த மொத்த சொத்து விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

90-களில் வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் மயில்சாமி. 100 படங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் நடித்திருக்கிறார், பிரபல காமெடி டைம் சோவையும் தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண்விழித்து அதிகாலை வீட்டிற்கு சென்ற போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென நெஞ்சு வலியால் மயில்சாமியின் உயிர் பிரிந்தது. இவருடைய மறைவு ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது. தற்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் மயில்சாமி உதவி செய்த விஷயங்களை பற்றி பலரும் பேசி வருகின்றனர். அவரைப் போல் ஒரு நல்ல மனிதன் எவருமே இல்லை என்றும் கூறுகின்றனர்.

மேலும் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வருமானம் இல்லாமல் தத்தளித்த ஏழைக் குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வாரி வழங்கினாராம். ஒரு கட்டத்தில் அவர் கையில் வைத்திருந்த பணமெல்லாம் தீர்ந்து போக, தனது வீட்டில் இருக்கும் நகைகளை அடமானம் வைத்து மீண்டும் மக்களுக்காக உதவி செய்தாராம்.

இப்படி தான தர்மம் செய்தும் மயில்சாமி தன்னுடைய குடும்பத்திற்காக சொத்துக்களையும் சேர்த்து வைத்துவிட்டு தான் சென்றிருக்கிறார். ஒரு புறம் சமூக சேவையை மனதார செய்த மயில்சாமி, மறுபுறம் தன்னுடைய குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொண்ட மனிதன்.

இவருடைய சொத்து விவரம் என்ன என்பது தற்போது வைரலாக பரவுகிறது. மயில்சாமிக்கு சாலிகிராமத்தில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. அதுபோக இன்னொரு வீடும் சென்னையில் இருக்கிறது. மொத்தத்தில் அவரிடம் 7 இரு சக்கர வாகனங்களும், 5 கார்களும் உள்ளது. அவருடைய சொத்து மதிப்பு கணக்கிட்டால் அது 18 கோடியாம்.

யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் எல்லோருக்கும் தன்னிடம் இருந்ததை வாரி வழங்கியிருக்கிறார். கொரோனா காலத்தில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 200 பேருக்கு மேல் சாப்பாடு போட்டு உதவி இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் தினமும் வாக்கிங் செல்கையில் ஏதாவது டீக்கடை பார்த்து விட்டால் அங்கே சென்று டீ அருந்துவதும் அங்கே உள்ள எல்லோருக்கும் டீ வாங்கிக் கொடுப்பதும் இவருடைய பழக்கமாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!