பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான 'பதான்' வசூலில் சாதனை படைத்தது

#Cinema #Actor #Director
Mani
3 years ago
பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான 'பதான்' வசூலில் சாதனை படைத்தது

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார்.

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா முழுவதும் 8000 திரையரங்குகளில் வெளியானது.

பல எதிர்ப்புகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'பதான்' படத்தின் வசூல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ரூ.1 பில்லியன் வசூலித்துள்ளது. இதனை படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். 'பதான்' படத்தின் வரவேற்பு தொடர்ந்து காணப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4