இன்று ஸ்ரீ இராமகிருஷ்ண ஜெயந்தி விழா உலகெங்கும் உள்ள மடங்களில் கொண்டாடப்பட்டு வரும்.

#ஆன்மீகம் #குருக்கள் #வணங்குதல் #இன்று #லங்கா4 #spiritual #Holy sprit #worship #today #Lanka4
இன்று ஸ்ரீ இராமகிருஷ்ண ஜெயந்தி விழா உலகெங்கும் உள்ள மடங்களில் கொண்டாடப்பட்டு வரும்.

ஸ்ரீ இராமகிருஷ்ணர் இந்தியாவில் அதிகம் போற்றப்படும் ஒரு ஆன்மீக குருவாவார். இவரது ஜெயந்தி விழா நேற்று தொடக்கம் இன்று வரை சிறப்பாக அவரது மடங்களில் போற்றப்பட்டு வரும்.

ஸ்ரீ ராமகிருஷ்ணரை போன்று அவரது வழியில் ஆன்மிக பயணத்தை தொடர்ந்த அவரது மனைவி சாரதா தேவி, ராமகிருஷ்ணரின் சீடர்களில் தலைமை சீடராக போற்றப்படும் விவேகானந்தர் ஆகியோரையும் ஆன்மிக குருவாக ஏற்று மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

அனைத்து மதங்களும் சமம் என்பதை வலியுறுத்தும் ராமகிருஷ்ணரின் கொள்கைகள் மாற்று மதத்தவர்களையும் அவரை குருவாக ஏற்க வைத்துள்ளது.

இந்தியாவில் தோன்றிய தலைசிறந்த ஆன்மிக குருமார்களில் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும் ஒருவர். இவர் 1892 ம் ஆண்டு மாசி மாதம் சுக்லபட்சம் துவிதியை திதியில் அவதரித்தார். இவரது அவதார தினம் அனைத்து ராமகிருஷ்ணர் மடங்களிலும் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சரின் 187 வது திருஅவதார ஜெயந்தி விழா பிப்ரவரி 21 ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது. துவிதியை திதி பிப்ரவரி 21 ம் தேதி காலை 09.04 மணிக்கு துவங்கி, பிப்ரவரி 22 ம் தேதி அதிகாலை 05.57 வரை உள்ளதால் நாள் முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் 19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் அவதரித்த ஆன்மிக குரு ஆவார். நவீன இந்தியாவில் தனது ஆன்மிக போதனைகளால் பல மாற்றங்களை ஏற்படுத்தியவர்.

ஏழைமையான குடும்பத்தில் பிறந்த ராமகிருஷ்ணர், குடும்ப வறுமையின் காரணமாக அடிப்படை கல்வி மட்டுமே பயின்றார். மிக இளம் வயதிலேயே இவருக்கு ஆழமான ஆன்மிக ஞானம் ஏற்பட்டது.

ஆன்மிகத்தின் மீது இவரது மனம் ஈர்க்கப்பட்டு, பூஜை, பிரார்த்தனை, தியானம் ஆகியவற்றிலேயே பெரும்பாலான நேரத்தை கழித்தார். கடவுளை நேரில் காண வேண்டும் என்ற உறுதியான ஆசை அவருக்குள் இருந்தது.

தனது ஆசையை அடைவதற்காக இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என பல மதங்களிலும் ஆன்மிக தேடலை விரிப்படுத்தினார். இந்த தேடலின் விளைவாக பைரவி பிரமணியின் சீடரானார் ராமகிருஷ்ணர்.

அவர் ராமகிருஷ்ணருக்கு ஆன்மிகத்தின் புதிய வழியை, ஞானத்தை போதித்தார். தான் கற்ற ஆன்மிக கருத்துக்களை சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பலருக்கும் போதித்து, பலரையும் தனது சீடர்களாக ஏற்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!