தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரசார தொடக்க விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

#Tamil Nadu #Tamil People #Tamilnews #Tamil Student #sri lanka tamil news #Tamil #TamilNadu Police
Mani
1 year ago
தமிழைத் தேடி  விழிப்புணர்வு பிரசார தொடக்க விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு பேச்சு!

தமிழை தேடி என்ற விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தொடக்க விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை நடைபெற்றது,  இந்த பிரசார பயணம் சென்னையிலிருந்து மதுரை வரை 8 நாட்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 28ஆம் தேதி  நிறைவடைய உள்ளது.

தமிழை தேடி தொடக்க விழாவிற்கு ஜி கே மணி தலைமை தாங்கினார்,  முன்னாள் மத்திய அமைச்சர் ஏ கே மூர்த்தி வரவேற்பு உரையாற்றினார்.  விழாவின் தொடக்கமாக மருத்துவர் டாக்டர் ராமதாஸ் தமிழன்னை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  பின்பு தமிழன்னை திருவுருவ சிலையை பிரசார வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ளது ராமதாஸ் திறந்து வைத்தார்.

பின்பு மருத்துவர் டாக்டர் ராமதாஸ் எழுதிய தமிழ் எங்கே புத்தக வெளியீடு நடைபெற்றது இதில் விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் விஜி சன் சந்தோசம் வெளியிட்ட டெல்லி தலைநகர் தமிழ் சங்க செயலாளர் முகுந்தன் இதைப் பெற்றுக் கொண்டார், ஆசிரியர் அ கோபாலன்,  அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கத் கே பெரியண்ணன்,  தலைநகர் தமிழ் சங்க சென்னை தலைவர் கணபதி,  டெல்லி முத்தமிழ் பேரவை தலைவர் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ராமதாஸின் பரபரப்பு பேச்சு தமிழை தேடி நான் தமிழ்நாட்டில் தேடுகின்றேன்,  தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்று எண்ணுகின்ற அனைவரின் நல் உள்ளங்களுக்கு என்னோடு மதுரை வரை வருகிறது.  உலக தாய்மொழி தினமான நேற்று தமிழ் எங்கே இருக்கிறது அந்த தோட்டத்தில் பார்த்தேன், இந்தத் தோட்டத்தில் பார்த்தேன் , அந்த கல்லூரியில் பார்த்தேன், தலைமை நிலையத்தில் பார்த்தேன,  நீதிமன்றத்தில் பார்த்தேன் என்று யாராவது சொன்னார்கள் என்றால் அவர்களுக்கு ரூபாய் 5 கோடி பரிசு அளிக்கப்படும்.  என்னிடம் ஐந்தாயிரம் கூட இல்லை ஆனால் என் தலையை அடகு வைத்துக் கொடுக்கிறேன் எனக்கு தெரியும் தமிழ் இருக்கிறது. என்று யாராவது சொன்னார்களா சொல்ல முடியாது சொல்லும் திறன் அவர்களுக்கு இனிய அப்படி சொல்கிறார் என்றால் பொய் சொல்கிறார் என்று அர்த்தம் என்று உறக்கமாக சொன்னார் டாக்டர் ராமதாஸ்.

தமிழை தேடி பிரசார பயணம் மற்ற மொழிகளுக்கு எதிரி அல்ல இப்பயணத்தை பற்றி தமிழ் கூறும் நல் உலகம் தமிழ் விரும்பிகளால் இப்போது பேசப்படுகிறது,  இது சிறிய அளவு வெற்றிதான் தமிழ் சங்கம் வளர்த்த மதுரை சென்றடையும் போது இந்த பிரசார பயணம் வெகுவாக மக்கள் மத்தியில் பேசப்படும்.

மதுரை நோக்கியா பரப்புரப் பயணத்தை தொடங்க டாக்டர் ராமதாஸ் செல்லும் வழியில் மறைமலை நகரில் இரவு பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி கே மணி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார் நான் தமிழை தேடி மதுரை நோக்கி பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது.  தமிழ் பேசும்போது பிற மொழிகளை கலந்து பேசாதீர்கள் உங்கள் வீட்டில் இருந்து தமிழ் பேசும்  பயணம் தொடக்கட்டும் குறிப்பிட்டுள்ளார்.

 


 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!