மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர் போலீசாரால் கைது

#India #Tamil Nadu #Tamilnews
Mani
3 years ago
மனைவியை பீர்பாட்டிலால் தாக்கிய கணவர் போலீசாரால் கைது

சென்னை காந்திநகர் பல்லவன் வீதியை சேர்ந்தவர் சுரேகா (36). அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவர் குணசீலனை விட்டு பிரிந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். குணசீலன் முன்பு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் மீது கொலை வழக்கு உள்பட 6 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று முன்தினம் வீட்டில் சுரேகா மட்டும் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த குணசீலன், சுரேகாவிடம் வாக்குவாதம் செய்தார். பொதுமக்கள் திரண்டதும் குணசீலன் திடீரென சுரேகாவை கட்டை மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

தாக்குதலில் காயமடைந்த சுரேகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்யப்பட்டது. உதவி கமிஷனர் பாஸ்கர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், பெண்கள் மீதான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குணசீலனை கைது செய்தார். அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4