காத்திருந்து ஏமாற்றம் அடைந்து விட்டோம்: எஸ்.பி.திஸாநாயக்க

#SriLanka #Sri Lanka President #srilanka freedom party #sri lanka tamil news #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
காத்திருந்து ஏமாற்றம் அடைந்து விட்டோம்: எஸ்.பி.திஸாநாயக்க

தேர்தலை எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும், தேர்தல் நடத்தப்பட்டால், நிச்சயம் தாம் வெற்றி பெறுவோம்  என்றும், பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட உறுப்பினர்  .எஸ்.பி.திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவது அவசியம் ஆனால் முதலில் செய்ய வேண்டியது பசித்த மக்களுக்கு உணவளிப்பதுதான் என்றும், ஆனால் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் துக்கங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வேலைத்திட்டம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த திரு.திஸாநாயக்க, இன்னும் ஓராண்டு அல்லது ஒன்றரை வருடங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

முதலீட்டாளர்களுக்கு  பயந்து நாடு நாசமடைந்துள்ளதாகவும், துறைமுக நகரை நாட்டுக்கு வளமாக மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்த  திஸாநாயக்க, துறைமுக நகரம் அபிவிருத்தியடையும் என அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4