கொரோனாவுக்கு போலியான மருந்தை வெளிநாட்டிற்கு அனுப்பி 6 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

#Corona Virus #Medicine
Mani
3 years ago
கொரோனாவுக்கு போலியான மருந்தை வெளிநாட்டிற்கு அனுப்பி 6 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கீழ்கட்டளையில் முருகப்பா மொத்த விற்பனை சப்ளையர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஹரிகரசுப்ரமணியம் (வயது 37), அவரது மனைவி காஞ்சனா (25). அவர்கள் மீது அமெரிக்க நிறுவனம் ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.

அதில், வெளிநாடுகளுக்கு போலியான கொரோனா மருந்தை சப்ளை செய்து, ரூ.6.30 கோடி மோசடி செய்து விட்டதாக, அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஹரிகரசுப்பிரமணியம், காஞ்சனா ஆகியோரை கைது செய்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4