உத்தர பிரதேச நகை கடை ஒன்றில் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளை கும்பல்

#India #Robbery #Police #Gold
Mani
3 years ago
உத்தர பிரதேச நகை கடை ஒன்றில் கையில் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளை கும்பல்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள மதுபன் பப்புதம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜாக்ருதி விஹார் பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை கும்பல் புகுந்து கொள்ளையடிக்க முயன்றது.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. கடையில் இருந்து உரிமையாளர் வெளியே வந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்ததாக தெரிகிறது.அப்போது முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் நகைக்கடைக்குள் புகுந்தது. திடீரென்று அந்த வழியாக வந்தார்கள்

அந்த நபர் வாசலில் நிற்பதைக் கவனித்த உரிமையாளர் அவர்களைத் தடுக்க முயன்றார். ஆனால், துப்பாக்கி ஏந்திய நபர் அத்துமீறி நுழைந்ததால், கடையின் உரிமையாளர் உடனடியாக கடையில் இருந்து கீழே குதித்து தப்பியோடியுள்ளார்.

பின்னர், அவர் சத்தம் போட்டார். பரபரப்பான தெருவில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் உதவி ஆணையர் அபிஷேக் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4