நடிகர் சந்தானம் பழனி முருகன் கோவிலில் கிரிவலம்

#TamilCinema #Tamil Nadu #Actor #Temple
Mani
3 years ago
நடிகர் சந்தானம் பழனி முருகன் கோவிலில் கிரிவலம்

பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் அண்மையில் நடைபெற்றது. இதையடுத்து சினிமா நடிகர்களின் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா, கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதையடுத்து இன்று பழனி முருகன் கோவிலுக்கு திரைப்பட நடிகர் சந்தானம் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

முன்னதாக நடிகர் சந்தானம் கிரிவலம் மலையடிவாரத்தில் உள்ள மூன்று கிலோ மீட்டர் கிரிவலம் பாதையை அடைந்தார். பின்னர் நடிகர் சந்தானம் ரோப்கார் மூலம் மலையேறி முருகனை தரிசனம் செய்தார். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் நடிகர் சந்தானத்துக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் சந்தானம் நடிக்கும் வடுகப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சந்தானம் மற்றும் திரைப்பட குழுவினர் பழனியில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4