தொழில் துறையில் சிரமம் கொள்ளும் சிம்ம ராசிக்காரர் , வியாபாரத்தில் இலாபம் அடையும் மகர ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
தொழில் துறையில் சிரமம் கொள்ளும் சிம்ம ராசிக்காரர் , வியாபாரத்தில் இலாபம் அடையும் மகர ராசிக்காரர்களுக்கான இன்றைய ராசிபலன்

மேஷம்
அசுவினி : திட்டமிட்ட செயல்களை இன்று முடிப்பீர்கள். அடிப்படை வசதிகள் அதிகரிக்கும்.
பரணி : அரசு வழியிலான செயலில் போராடி வெற்றி பெறுவீர்கள். தைரியம் அதிகரிக்கும் நாள்.
கார்த்திகை 1: அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பு வரும். உங்களை விமர்சித்தவர்கள் விலகிச் செல்வர்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும். மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : வீட்டில் சுப நிகழ்ச்சிக்குரிய பேச்சு முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : குடும்பத்தில் ஒருவரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கோயிலுக்கு செல்வீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர்கள். உங்கள் முயற்சி முன்னேற்றம் தரும்.
திருவாதிரை : புதிய வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு இன்று நல்ல செய்தி தேடி வரும்.
புனர்பூசம் 1, 2, 3 : நண்பர்கள் உதவியுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியவர்கள் விலகிச் செல்வர். நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூசம் : தொழிலில் உங்கள் முயற்சி வெற்றியாகும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம் : குழந்தை பாக்கியம் குறித்து தகவல் தெரியவரும். சுபச்செலவுகள் செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்
மகம் : மற்றவர்களை நம்பி உங்கள் பணிகளை ஒப்படைக்க வேண்டாம். அதனால் சங்கடம் உண்டாகும்.
பூரம் : உங்கள் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். சிந்தித்து செயல்படும் நாள்.
உத்தரம் 1 : தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் எண்ணம் இன்று நிறைவேறும். நண்பர்களால் தொழிலில் புதியபாதை தெரியும்.
அஸ்தம் : நீங்கள் திட்டமிட்டிருந்த செயல்களை அப்படியே நிறைவேற்றி முடிப்பீர்கள்.
சித்திரை 1, 2 : கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை விலகும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4 : உங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு செயல்படுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி : வேலை வாய்ப்பு குறித்த சிந்தனை மேலோங்கும். குடும்ப அதிருப்திக்கு ஆளாவீர்கள்.
விசாகம் 1, 2, 3: உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

விருச்சிகம்
விசாகம் 4 : குடும்ப உறவுகளிடம் செல்வாக்கு உயரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
அனுஷம் : நீங்கள் ஈடுபடும் முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். வழக்கு வெற்றியாகும்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் அதிகாரியின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். திருமணத்திற்கான வரன் தேடி வரும்.

தனுசு
மூலம் : உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் லாபம் உண்டாகும்.
பூராடம் : உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு வெளிப்படும்.
உத்திராடம் 1 : எதிர்கால நலன் கருதி புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள். வியாபார எதிரிகளின் தொல்லை இருக்காது.
திருவோணம் : உத்தியோகத்தில் இருந்த சங்கடம் விலகும். கமிஷன் ஏஜென்சியினர் லாபம் காண்பீர்கள்.
அவிட்டம் 1, 2 : புதிய பொறுப்பு உங்களைத்தேடி வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : அலுவலகத்தில் உங்கள் செயலுக்கு மதிப்புண்டாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
சதயம் : நண்பர்களால் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த பண வரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 : உங்கள் தேவை இன்று நிறைவேறும். தடைபட்ட செயல் நடக்கும். நிதிநிலை உயரும்.

மீனம்
பூரட்டாதி 4 : நீங்கள் விரும்பியவற்றை அடைவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
உத்திரட்டாதி : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டில் சுப நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை முன்னெடுப்பீர்கள்.
ரேவதி : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.