அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுகிறது.

#Tamil Nadu #Tamilnews #Tamil #Court Order
Mani
1 year ago
அ.தி.மு.க., பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இன்று அறிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார்.இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, சட்ட விதிகளின்படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதை கண்டறிந்து, பொதுக்குழு கூட்டத்தை தொடர உத்தரவிட்டது.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஜனவரி மாதம் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஜனவரி 11-ந் தேதி ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உத்தரவிட்டனர்.

இதன்பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்பேரில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனையடுத்து வேட்பாளர் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.

பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியது.

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக கிடைத்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு எப்படி அமையும் என்று தெரியவில்லை. என இரு தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!