பேட்மிண்டன் வீரரை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற கேள்விக்கு நடிகை டாப்சி விளக்கம்

#TamilCinema #Cinema #Love #Actress
Mani
3 years ago
பேட்மிண்டன் வீரரை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற கேள்விக்கு நடிகை டாப்சி விளக்கம்

தமிழில் "ஆடுகளம்" படத்தின் மூலம் அறிமுகமான டாப்சி, "ஆரம்பம்" மற்றும் "வை ராஜா வை" போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். டென்மார்க்கை சேர்ந்த டாப்ஸியும், மதியாஸ் போயும் காதலித்து வருகின்றனர். "எங்கள் காதலை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தினர் காதலை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்" என்று டாப்ஸி கூறியிருந்தார்.

இந்த நிலையில் டாப்ஸியை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? - என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டாப்ஸி, "நானும் மத்தியாஸ் போயும் 9 வருடங்களாக டேட்டிங் செய்கிறோம். என்னுடைய சமகாலத்தவர்கள் பலர் திருமணமானவர்கள்.

ஆனால் நான் திருமணம் செய்து கொள்ளும் அவசரத்தில் இல்லை. நாங்கள் நீண்ட காலமாக காதலித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாங்கள் இந்த உறவில் இருக்க உத்தேசித்துள்ளோம். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் போட்டி இல்லை. எனது காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேச விரும்பவில்லை,'' என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4