கரூரில் உள்ள கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மாசி மகத்திருவிழா நாளை தொடங்கி மார்ச் 15 வரை நடைபெறுகிறது.
கரூர் தாந்தோன்றி மலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத திருவிழாவும், மாசி தெப்ப திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.
இவ்விழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.'
இந்த ஆண்டு மாசி மகாத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, மார்ச் 26ம் தேதி கொடியேற்றமும், 4ம் தேதி திருகல்யாண உற்சவமும், 6ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், 8ம் தேதி தெப்பத்தேர் வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த விழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கோவில் முன்புறம் உள்ள தெப்பக்குளத்தில் பாசி படர்ந்து, செடிகள் துளிர்க்க துவங்கியுள்ளன. எனவே இக்குளத்தை முழுமையாக புனரமைத்து பாசிகளை அகற்றி குளத்தில் தண்ணீர் புத்துணர்ச்சி பெற்று அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.