நினைத்த எண்ணங்கள் நிறைவேறக்கூடிய இரு ராசிக்காரர்கள் , அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்கள்

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan #ராசிபலன் #இன்றைய_ராசிபலன்
Prasu
1 year ago
நினைத்த எண்ணங்கள் நிறைவேறக்கூடிய இரு ராசிக்காரர்கள் , அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்கள்

மேஷம்: 
அசுவினி : இழுபறியாக இருந்த வேலை இன்று எளிதாக முடியும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரணி : உங்கள் செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நினைத்ததை அடைவீர்கள். நிதிநிலை உயரும்.
கார்த்திகை 1 : செலவுகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். செலவுகளும் அலைச்சலும் ஏற்படும்.
ரோகிணி : எதிர்பாராத செலவுகளை இன்று சந்திப்பீர்கள். உங்கள் முயற்சிகளில் தடை சந்திப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 : உங்கள் செயல்களில் இன்று கவனம் தேவை. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3, 4 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள்.
திருவாதிரை : பழைய கடன் வசூலாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3 : உங்களுடைய நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும் நாள்.

கடகம்
புனர்பூசம் 4 : இழுபறியாக இருந்து வந்த முயற்சி நிறைவேறும் நாள்.
பூசம் : எதிர்கால வாழ்க்கைக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
ஆயில்யம் : நண்பர், உறவினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

சிம்மம்
மகம் : இரண்டு நாட்களாக இருந்த சங்கடம் விலகும். உங்கள் முயற்சி நிறைவேறும்.
பூரம் : புதிய முயற்சி பலன்தரும். நெருக்கடி விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
உத்தரம் 1 : உங்கள் செயலில் இன்று வெற்றி பெறும். எதிர்பார்த்தவற்றில் லாபம் காண்பீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் செயலில் எதிர்பாராத தடையை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அஸ்தம் : முயற்சியில் பொறுமை அவசியம். செலவு அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும்.
சித்திரை 1, 2 : புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான பணிகளில் கவனமுடன் செயல்படுங்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : நண்பர்களால் உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் .
சுவாதி : எதிர்பாலினர் அன்பிற்கு ஆளாவீர்கள். இருப்புகள் கரைய வாய்ப்புண்டு என்பதால் கவனம் தேவை.
விசாகம் 1, 2, 3 : தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.விரோதிகள் விலகிச் செல்வார்கள்.
அனுஷம் : உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். விரும்பியதை அடைந்து மகிழ்வீர்கள்.
கேட்டை : திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் முயற்சியில் நன்மை உண்டாகும்.

தனுசு
மூலம் : தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சொத்து விவகாரத்தில் வெற்றி அடைவீர்கள்.
பூராடம் : பழைய நட்புகளால் இன்று சில பிரச்னைகளை சந்திக்க நேரும். எச்சரிக்கைத் தேவை.
உத்திராடம் 1: செயல்கள் இழுபறி ஆனாலும் போராடி வெற்றி காண்பீர்கள்.உங்கள் செல்வாக்கு உயரும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : கவனத்துடன் செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். நிதி நிலை உயரும்.
திருவோணம் : வம்பு, வழக்குகளில் இன்று உங்களுக்கு எதிர்மறையான பலன்கள் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 : மற்றவரோடு வாக்குவாதம் வேண்டாம். மனவுளைச்சலுக்கு ஆளாவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும். உங்கள் முயற்சி லாபமாகும்.
சதயம் : மற்றவருக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள் அதனால் நினைத்ததை சாதிப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சியால் பொருளாதாரம் உயரும்.

மீனம்
பூரட்டாதி 4 : பணம் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திரட்டாதி : குடும்பத்தினர் மீது அக்கறை அதிகமாகும். பக்கத்து வீட்டாரிடம் சங்கடம் வேண்டாம்.
ரேவதி : செயல்களில் எச்சரிக்கையும் நிதானமும் தேவை இல்லையெனில் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.