டிராக்டர் மீது ஆம்னி பஸ் மோதல்: 5 பேர் பலி
தர்மபுரி அருகே நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த முனுசாமி கூலி தொழிலாளி, இவர் குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலம் வி கோட்டாவிற்கு காற்றாலை கயிறு திரிக்கும் கூலி வேலைக்கு டிராக்டரில் புறப்பட்டு சென்றார். இவருடன் மேலும் 11 பேர் பயணம் செய்துள்ளனர். டிராக்டரை முத்து என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இவர்கள் உங்களுடைய உடமைகள் மற்றும் உணவுப் பொருட்கள் மற்றும் காற்றாலை அடிக்கும் இன்ஜின்களுடன் காலை 7 மணி அளவில் தர்மபுரி- கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.
காவேரிப்பட்டணம் அருகில் உள்ள எர்ரள்ளி பஸ் நிறுத்தம் அருகே செல்லும் பொழுது இவர்களை பஸ் மோதியது. பேருந்தை விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது , ஆமைதுரை சேர்ந்த கருப்புசாமி என்பவர் ஓட்டி சென்றார்.
முன்னாள் சென்று கொண்டிருக்கும் டிராக்டரை முந்தி செல்லும்போது ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து திடீர் என்று டாக்டரின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
இந்த கோரை விபத்தில் டாக்டரிலிருந்து முனுசாமி அதே பகுதி சேர்ந்த வசந்தி முத்து மல்லி ஒரு குழந்தை உள்பட ஐந்து பேர் அதே இடத்தில் பலியானார், படுகாயம் அடைந்த ஏழு பெரும் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் கருப்பு சாமியை கைது செய்தது.