மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.

#India #Cinema #Actor #Court Order
Mani
1 year ago
மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.

மலையாள திரையுலகில் பிரபலமான நடிகர் மோகன்லால். தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ரஜினியின் புதிய படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2012-ம் ஆண்டு மோகன்லாலின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி அனுமதியின்றி இருந்த 2 ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

மோகன்லால் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வனத்துறை அமைச்சரிடம், தந்தங்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு மோகன்லால் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு மோகன்லாலிடம் தந்தங்களை ஒப்படைத்தது. ஆனால், பெரும்பாவூர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

அதன் அடிப்படையில் மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற மோகன்லாலின் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மோகன்லால் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம், யானை தந்த வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!