தமிழ் சினிமாவில் 1200 கோடி முதலீடு செய்துள்ள லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன்
இயக்குனர் மணிரத்னதுடன் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் முதல் பாகம் வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாம் பாகம் 150 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இரண்டு பெரிய பட்ஜெட் படங்களும் லைக்கா கைவசம் உள்ளது. அதன்படி ஷங்கர், கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை 250 கோடி பட்ஜெட்டில் லைக்கா தயாரித்து வருகிறது. இந்த படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோகம் செய்ய உள்ளது.
லால் சலாம் படத்தையும் 100 கோடி பட்ஜெட்டில் லைக்கா தான் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஏகே 62 படத்தை கிட்டத்தட்ட 250 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறது.
முதல்முறையாக இந்த படத்தில் மகிழ்திருமேனி, அஜித் இணைய உள்ள நிலையில் படத்தின் அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் பி வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தையும் லைக்கா 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது.
விதார்த் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் தொடரையும், ரோகினி வெங்கடேஷ் இயக்கத்தில் ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் தொடரையும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக லைக்கா தயாரிக்கிறது.