திருவாரூர் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

#Tamil Nadu #Tamilnews #God #goddess
Mani
2 years ago
திருவாரூர் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆலபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை குருவார பூஜை நடைபெற்றது. கலங்காமத் காத்தவிநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், அக்னகணபதி, வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. அப்போது, ​​குரு பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. பின்னர், உற்சவர் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

இதேபோல், நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!