சர்வதேச நாணய நிதியத்தின் 15  நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ள இலங்கை 

#IMF #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Ranil wickremesinghe #Lanka4
Prathees
3 years ago
 சர்வதேச நாணய நிதியத்தின் 15  நிபந்தனைகளையும் பூர்த்தி செய்துள்ள இலங்கை 

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெறுவதற்கான 15 நிபந்தனைகளையும் இலங்கை பூர்த்தி செய்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, 

குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்களின் மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே அடுத்த நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆண்டு முழுவதும் இலங்கையை சுற்றுலா தலமாக மாற்றி சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4