நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகப்போவதாக திரையுலகிலும், இணைய தளங்களிலும் பரபரப்பு தகவல்

#TamilCinema #Tamilnews #Actress
Mani
3 years ago
நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலகப்போவதாக திரையுலகிலும், இணைய தளங்களிலும் பரபரப்பு தகவல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாடகைத் தாய் மூலம் நயன்தாரா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அதன்பிறகு அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்கும் வகையில், அந்த குழந்தைகளை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள சினிமா பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளார்.

தற்போது ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் பெயரிடப்படாத தனது 75வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் ரவியுடன் இறைவன் உள்பட மேலும் 2 படங்கள் தயாராகி வருகின்றன.

இந்தப் படங்களை விரைவில் முடித்துவிட்டு சினிமாவில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும், நடிப்பை நிறுத்தினாலும் கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படத் தயாரிப்பில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இதை நயன்தாரா உறுதிப்படுத்தவில்லை. கேரளாவைச் சேர்ந்த நயன்தாரா 2005ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்களில் நடித்துள்ள இவர், இந்த படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூல் செய்து சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4