ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஹீரோ ஒருவர் தனது உடம்பை பல மடங்கு கூட்டி உள்ளார்

#TamilCinema #Cinema #India #Tamilnews #Lanka4 #Film
Kanimoli
3 years ago
ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஹீரோ ஒருவர் தனது உடம்பை பல மடங்கு கூட்டி உள்ளார்

 மாஸ் ஹீரோ ஒருவர் உடம்பை ஏற்றியுள்ளார். பின்னால் இருந்து சிகரத்தை பார்க்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்தால் அந்த நடிகரா இவர் என்று யாராலும் அடையாளம் காண முடியாது.

 பிருத்விராஜ் சுகுமார் தான் தற்போது உடல் எடையை கூட்டி உள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் ஹிட் படங்களை கொடுத்து வரும் பிருத்விராஜ் பாலிவுட் படமான படே மயா சோட்டா மியானின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்திருந்தார்.

இந்த படம் விரைவில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது அதுமட்டுமின்றி பாகுபலி பிரபலம் பிரபாஸ் உடன் இணைந்து சலார் படத்தில் பிரித்விராஜ் நடித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு பிருத்விராஜின் கடுவா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு பிருத்விராஜின் படங்கள் தொடர் தோல்வியை தழுவி வரும் நிலையில் கடுவா படம் தமிழில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

 மார்ச் மாதம் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தனது அடுத்த படத்திற்காக உடற்பயிற்சி மூலம் உடம்பை இரும்பு போல் மாற்றி உள்ளார். இது பிருத்விராஜ் என்றால் ரசிகர்களே நம்புவார்களா என்பது சந்தேகம் தான்.

பிருத்விராஜின் இந்த ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலம் அவருக்கு நிறைய படங்களில் வில்லன் வாய்ப்பு கிடைக்கும் என்று பேசப்படுகிறது. அதுமட்டுமின்றி மீண்டும் இவரை தமிழ் படங்களில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4