செல்வ செழிப்பில் இருக்கும் ரஜினி யாருக்கும் உதவ கூட முடியாத நிலையில் இருக்கிறார்

#Cinema #TamilCinema #Actor #Film #Salary #Lanka4
Kanimoli
3 years ago
செல்வ செழிப்பில் இருக்கும் ரஜினி யாருக்கும் உதவ கூட முடியாத நிலையில் இருக்கிறார்

 ரஜினி தற்போது நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை தூண்டி இருக்கிறது. அதில் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் இப்படத்தை வேற லெவல் வெற்றிப்படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். ஏனென்றால் அவர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பல வருடங்கள் ஆகிறது.

அதனாலேயே அவர் அடுத்த படத்திற்கான இயக்குனரை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் காட்டி வருகிறார். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி அவரிடம் இருக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பு மட்டுமே 400 கோடியை தாண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவரிடம் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கார்களும் இருக்கிறது.

 போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு மட்டுமே 40 கோடிக்கு மேல் இருக்கும். இது தவிர தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அவருக்கு சொந்தமாக அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை இருக்கின்றன. அதன் மூலமாக வரும் வருமானமே எக்க சக்கமாக இருக்கும். இவை அனைத்தும் வெளிப்படையாக தெரிந்த சொத்துக்கள் தான்.

 ரஜினியின் மனைவி தங்களிடம் பணம் இல்லை என்பது போன்ற நொண்டி சாக்குகளை கூறி சமாளிப்பார். இதை பார்க்கும் பிரபலங்கள் பலரும் கோடிகளில் புரளும் சூப்பர் ஸ்டாருக்கு சம்பளம் கொடுக்க கூட முடியவில்லை என்று கேலி பேசி வருகின்றனர். ஆனால் இது போன்ற விஷயங்கள் அனைத்தையும் ரஜினியின் மனைவி தான் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4