மஹிந்த ராஜபக்ஸவிற்கு மீண்டும் பிரதமர் பதவி? நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

#SriLanka #Sri Lanka President #PrimeMinister #Mahinda Rajapaksa #Mahindha #Lanka4
Mayoorikka
3 years ago
 மஹிந்த ராஜபக்ஸவிற்கு மீண்டும் பிரதமர் பதவி? நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்

தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கே அந்த பதவியை வழங்கும் திட்டம் உள்ளதாக அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கேட்டுள்ளனர் என்றார்.

ஜயசுமண மேலும் குறிப்பிடுகையில்,

பிரதமர் பதவியை மாற்றும் திட்டம் இருப்பதாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியில் உள்ள எமது நண்பர்கள் தெரிவித்தனர். எங்களுக்கும் அப்படி ஒரு முன்மொழிவு கிடைத்தது.

தலையணையை மாற்றினால் தலைவலி குணமாகும் என்று நாம் நினைக்கவில்லை. இந்த நேரத்தில் அரசு வீட்டிற்கு செல்ல வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது.

இந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை.   மகிந்த ராஜபக்ச இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும். அவர் நாட்டுக்காக ஏதாவது செய்திருந்தால், அந்த நற்பெயரைக் காக்க அது ஒரு காரணமாக இருக்கும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4